தேசிய செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல் + "||" + Hang the culprits at earliest: Delhi CM Kejriwal on 9-year-old’s rape and murder

சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்
9 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

தேசிய தலைநகர் டெல்லியில் 9 வயதான சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக இடுகாட்டு பாதிரியார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் பற்றி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “9 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தது மிகவும் வெட்கக்கேடானது. டெல்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று அவர் இந்தியில் பதிவிட்டிருந்தார்.

மேலும் “பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை நாளை சந்திக்கப் போகிறேன், நீதிக்கான இந்த போராட்டத்தில் குடும்பத்திற்கு உதவ எல்லாவற்றையும் செய்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். "இந்த விவகாரத்தில் முழுமையான, சரியான விசாரணை நடைபெறவில்லை என்று நாங்கள் கருதினால், மாஜிஸ்திரேட் விசாரணையை நடத்துவோம்" என்று அவர் உறுதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் கைது
தாம்பரம் ரெயில்நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
2. தொழிலாளி கொலைக்கு பழிக்குப்பழி நெல்லையில் மேலும் ஒருவர் தலை துண்டித்து கொலை
நெல்லையில் தொழிலாளி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், பழிக்குப்பழியாக மேலும் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
3. மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
4. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
5. கோடநாடு வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய மனு மீது சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.