தேசிய செய்திகள்

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை + "||" + India negotiates with various countries for accreditation of vaccine certificates

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
தடுப்பூசி சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாக வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி வி.முரளீதரன் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறி இருப்பதாவது:-

“தற்போது தடுப்பூசி பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. கொரோனா தொற்றால் சாதாரணமான வெளிநாட்டுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தற்போது பயணத்தில் பலதரப்பு நெறிமுறைகள் இல்லை. 

பல நாடுகள் ‘கொரோனா நெகட்டிவ்’ என்னும் சான்றிதழ்களை கேட்கின்றன. தடுப்பூசி சான்றிதழ்களுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பார்த்திபனுக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்
சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
2. தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!
தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை நீக்கக்கோரி வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம் - கூடுதல் தரவுகளை கேட்கும் உலக சுகாதார அமைப்பு
கோவேக்சினுக்கு அங்கீகாரம் வழங்கும் கூடுதல் உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் தெளிவுபடுத்தல்கள் தேவை என உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழு முடிவு செய்துள்ளது.
4. சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.
5. கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்
கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.