மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும் + "||" + New equipment for corona testing at Chennai Airport Results in 30 minutes

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும்

சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்காக புதிய கருவிகள் - 30 நிமிடத்தில் முடிவுகள் தெரியும்
சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவது குறித்து கடந்த வாரம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், லண்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையுடன், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ரூ.900 கட்டணமாக வசூலித்து 4 மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளை 13 நிமிடங்களில் அறிவிக்கும் நவீன சோதனை முறை சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

அதன்படி ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகளில் பரிசோதனை முடிவுகள் 30 நிமிடங்களில் வழங்கப்படும்.

இந்த புதிய கருவியின் பயன்பாடு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் செல்லும் பயணிகளுக்கு இது பெரும் வசதியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வரும் விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கொச்சி மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ரகசிய தகவல் அளித்தனர்.
4. சென்னை விமான நிலையத்தில் கப்பல் கேப்டனிடம் ‘சாட்டிலைட்’ போன் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கத்தாருக்கு விமானம் சென்றது. அதில் செல்ல இந்தோனேசியா நாட்டைச்சோ்ந்த டெய்ஸ் சென்டோ (வயது 50) என்பவரது உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
5. சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்த பயணிகள்
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து 4 விமானங்களில் வந்த பயணிகள், குடியுரிமை சோதனை கவுண்ட்டர்களில் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.