தேசிய செய்திகள்

“ராஜீவ்காந்தி விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, தியாகத்தால் அறியப்படுபவர்” - ரந்தீப் சுர்ஜேவாலா + "||" + Rajiv Gandhi is known for Sacrifice not for Awards Randeep Surjewala

“ராஜீவ்காந்தி விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, தியாகத்தால் அறியப்படுபவர்” - ரந்தீப் சுர்ஜேவாலா

“ராஜீவ்காந்தி விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, தியாகத்தால் அறியப்படுபவர்” -  ரந்தீப் சுர்ஜேவாலா
தயான்சந்த் பெயரை கேல்ரத்னா விருதுக்கு சூட்டியதை காங்கிரஸ் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதில் ராஜீவ்காந்தி பெயர் நீக்கப்பட்டது. மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றப்படுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்றபோதிலும், பிரதமர் மோடியை குறை கூறியுள்ளது. அக்கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அளித்த பேட்டி வருமாறு:-

மேஜர் தயான்சந்த் பெயரை கேல்ரத்னா விருதுக்கு சூட்டியதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்கு தயான்சந்த் பெயரை பிரதமர் மோடி இழுத்திருக்க வேண்டாம். விருதுகளால் அறியப்படுபவர் அல்ல, ராஜீவ்காந்தி. தனது தியாகத்தால் அறியப்படுபவர்.

இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். இதுபோல், மைதானங்களுக்கு சூட்டப்பட்ட நரேந்திர மோடி, அருண் ஜெட்லி ஆகிய பெயர்களையும் நீக்கிவிட்டு, மில்காசிங், தெண்டுல்கர், கவாஸ்கர் போன்ற விளையாட்டு வீரர்கள் பெயரை சூட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
2. தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.
3. காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
4. எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருது மத்திய மந்திரி வழங்கினார்
சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தூய்மை வளாக விருதை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.
5. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.