கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங் + "||" + TNPL Cricket First Qualifier Chepak Super Gillies batting first

டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்

டி.என்.பி.எல். கிரிக்கெட் முதலாவது தகுதிச்சுற்று - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் பேட்டிங்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ராஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்கிறது.

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் வருமாறு;-

திருச்சி வாரியர்ஸ்: சந்தோஷ் ஷிவ், அமித் சாத்விக், நிதிஷ் ராஜகோபால், முகமது அத்னன்கான், ஆதித்யா கணேஷ், அந்தோணி தாஸ், ரஹில் ஷா (கேப்டன்), சரவணகுமார், எம்.மதிவாணன், பொய்யாமொழி, சுனில் சாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி (கேப்டன்), என்.ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், ராதாகிருஷ்ணன், சாய் கிஷோர், ஆர்.சதீஷ், சசிதேவ், ஹரிஷ் குமார், சோனு யாதவ், எம்.சித்தார்த், தேவ் ராகுல்.

தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கோவை அணிக்கு எதிரான இன்றைய டி.என்.பி.எல். ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.
3. டி.என்.பி.எல். கிரிக்கெட் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கு 154 ரன்கள் இலக்கு
திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றில் முதலில் பேட்டிங் செய்த சேபாக் சூப்பர் கில்லீஸ் அணி 153 ரன்கள் எடுத்துள்ளது.
4. டி.என்.பி.எல். : சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி திருச்சி அணிக்கு 133-ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்தது.அந்த அணியில் ராதாகிருஷ்ணன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து உள்ளார்.
5. டி.என்.பி.எல். கிரிக்கெட்: டாஸ்வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
இரண்டாவது போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன.