உலக செய்திகள்

நிரவ் மோடி விவகாரம்: இந்தியா-இங்கிலாந்து ஆலோசனை + "||" + India, UK review permission granted to Nirav Modi to appeal against extradition

நிரவ் மோடி விவகாரம்: இந்தியா-இங்கிலாந்து ஆலோசனை

நிரவ் மோடி விவகாரம்: இந்தியா-இங்கிலாந்து ஆலோசனை
நாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிரவ் மோடி விவகாரத்தில், இந்தியா-இங்கிலாந்து நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
லண்டன், 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார். இந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரியும் அனுமதி அளித்தார்.

ஆனால், நிரவ் மோடி மனுவை ஏற்று, நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட்டு நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இது, இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், இந்த உத்தரவு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் இங்கிலாந்து அரசுத்தரப்பு வக்கீல்கள் பிரிவு நேற்று தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பருவநிலை மாற்றம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாடுகள் பட்டியலில் இந்தியா
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு ஆளாகும் 11 நாடுகளின் பட்டியலில் இந்தியா உள்ளது.
2. உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா: பிரெட் லீ
20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியா முன்னணியில் இருப்பதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
3. நிரவ் மோடி கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்க நீதிமன்றம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
4. கொரோனா நெருக்கடியில் இந்தியாவின் செயல்பாடு: சர்வதேச நிதியம் பாராட்டு
கொரோனா நெருக்கடியில் துரிதமாக செயல்பட்டதாக இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
5. நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 8.3 % ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு
2021-22 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.3 சதவிகிதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.