மாநில செய்திகள்

மின்கட்டணத்தை பொறுத்தவரை பயன்பாட்டிற்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி + "||" + Minister Senthil Balaji said that only utility bills are charged for electricity

மின்கட்டணத்தை பொறுத்தவரை பயன்பாட்டிற்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்கட்டணத்தை பொறுத்தவரை பயன்பாட்டிற்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்கட்டணத்தை பொறுத்தவரை பயன்பாட்டிற்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் சம்பத்குமார் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி குறைந்துவிட்டதாக தெரிவித்தார். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று முற்றிலும் தவறானது என்றும், 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

கடந்த 9 மாத காலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறப்புத்திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 50% மின்சார பயன்பாடு அதிகரித்த போதும், கட்டணம் அதிகளவில் வசூலாகவில்லை என்றும், மின் துறையில் தமிழ்நாடு அரசை ஒவ்வொரு முறையும் தவறான தோற்றத்தில் சித்தரிக்க முயற்சித்து வருகிவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் மின்கட்டணத்தை பொறுத்தவரை பயன்பாட்டிற்கான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், மின் கட்டண கணக்கீட்டில் எங்கு குறை உள்ளது என்பது குறித்து புகார் தெரிவித்தால், அதிகாரிகள் வீட்டிற்கே சென்று சரிபார்த்து கட்டணம் வசூலிப்பார்கள் என்று குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆபாச படம் வெளியிட்டதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு புகார்
இணைய தளங்களில் தன்னை பற்றிய ஆபாசபடங்களை வெளியிட்டுள்ளதாக தி.மு.க. பிரமுகர் மீது நடிகை காயத்ரி ரகுராம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
2. வீட்டை விட்டு நடிகையை வெளியே தள்ளியதாக புகார்
தமிழில் அன்பே ஆருயிரே, லீ, மருதமலை, ஜாம்பவான், காளை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நிலா.
3. வலைத்தளத்தில் அவதூறு பிரபல நடிகை போலீசில் புகார்
பிரபல இந்தி நடிகை சுவரா பாஸ்கர். இவர் தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்து பிரபலமானார்.
4. வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார்
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு தி.மு.க.வினர் தங்க மூக்குத்தி கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
5. அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார்
சென்னை அண்ணா பல்கலை கழகம் மீது ரூ.16 கோடி வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது.