மாநில செய்திகள்

தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் + "||" + Vaccine shortage Covaxin first dose not administered Minister Ma Subramanian

தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தடுப்பூசி தட்டுப்பாடு; கோவேக்சின் முதல் டோஸ் செலுத்தப்படுவதில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் மின்கல வாகனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் விரைவில் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டுபிடிப்பு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படும் நிலவரம் குறித்து பேசிய அவர், கோவிஷீல்டு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணமாக கோவேக்சின் முதல் டோஸ் தடுப்பூசி தற்போது செலுத்தப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்- உலக சுகாதார அமைப்பு அடுத்தவாரம் இறுதி முடிவு
வசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.
2. இரண்டாவது தவணையாக கோவிஷீல்டுக்கு பதிலாக கோவேக்சின் செலுத்தி கொள்ளலாமா? மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பதிலாக கோவேக்சின் தடுப்பூசியை இரண்டாம் தவணையாக செலுத்திக் கொள்ளலாமா என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
4. கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.