தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு + "||" + Schools reopening dates announcement for 1st to 8th class in UP

உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
உத்தரபிரதேசத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில், நோய்த்தடுப்பு விதிகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாநில அரசு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம், பாபுரி கிராமத்தில் நேற்று ஒரு தனியார் பஸ், லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.
2. உத்தரபிரதேசத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
3. உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி
உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை ஓட்டி செல்கிறார்.
4. உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு; மேதா பட்கர் பங்கேற்பு
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மாநாடு நடந்தது. பஸ், டிராக்டர்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வந்தனர். மேதா பட்கரும் பங்கேற்றார்.
5. உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை: ஜே.பி.நட்டா
உத்தரபிரதேசத்தில் செயல்படாத மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படலாம் என பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதிபட தெரிவித்தார்.