உலக செய்திகள்

நைஜீரியா: எரிவாயு நிறுவன ஊழியர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி + "||" + Several killed in attack at Shell facility in Nigeria’s southeast

நைஜீரியா: எரிவாயு நிறுவன ஊழியர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி

நைஜீரியா: எரிவாயு நிறுவன ஊழியர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிச்சூடு - 7 பேர் பலி
நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் இமோ மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு நேற்று அலுவலக பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சை இடைமறித்த துப்பாக்கியேந்திய கும்பல் ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன ஊழியர்கள் 6 பேர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியா: சிறைச்சாலையில் துப்பாக்கியேந்திய கும்பல் தாக்குதல் - 800 கைதிகள் தப்பியோட்டம்
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த துப்பாக்கியேந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.
2. நைஜீரியா: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
3. நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி
நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர்.
4. நைஜீரியா: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி
நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியா: இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் பலி
நைஜீரியாவில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர்.