தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் கைது + "||" + Unable to pay debt, Bangladesh national tries entering India; caught at border

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் கைது

இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் கைது
இந்திய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய வங்காளதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-வங்காளதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மேற்குவங்காளத்தின் நதினா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வங்காளதேச எல்லையில் இருந்து சட்டவிரோதமாக 3 பேர் இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டுபிடித்தனர். 

துரிதமாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்த வங்காளதேசத்தினர் 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மணிக் மண்டல் (32), அவரது மனைவி பிரியா மண்டல் (25), மற்றும் அவர்களது குழந்தை மனுஷக் மண்டல் (5) என்பது தெரியவந்தது.

வங்காளதேசத்தை சேர்ந்த மணிக் மண்டல் கடன் பிரச்சினை காரணமாக தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குள் வசிக்க திட்டமிட்டு மேற்குவங்காளத்தின் நதினா மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். இதையடுத்து, பிடிபட்ட 3 பேரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி; வங்காளதேசம் போராடி தோல்வி!
வங்காளதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
2. வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
3. 2-வது டி20 போட்டி :பாகிஸ்தான் அணிக்கு 109 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 108 ரன்கள் எடுத்துள்ளது.
4. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டி; வங்காளதேசம் பேட்டிங் தேர்வு
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
5. வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல்: அமெரிக்கா கண்டனம்
வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.