உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை நிறுத்தி வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் + "||" + Man surrenders after claiming to have bomb near US Capitol

அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை நிறுத்தி வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்

அமெரிக்க நாடாளுமன்றம் அருகே காரை நிறுத்தி வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் அருகே காரை நிறுத்தி அதில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது. அதிக பாதுகாப்பு நிறைந்த இப்பகுதி அருகே நேற்று கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்த காரை ஓட்டி வந்த நபர் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு நாடாளுமன்ற கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டுள்ள காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருப்பதாக கூறினார்.

உடனடியாக, பாதுகாப்பு படையினர் அந்த கார் நின்ற பகுதியை சுற்றிவளைத்தனர். காரில் இருந்த நபரை காரை விட்டு கீழே இறங்கும்படி எச்சரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, சுமார் 4 மணி நேர பரபரப்பிற்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் தனது காரை விட்டு கிழே இறங்கி பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்ய போலீசார் நாடாளுமன்ற கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அந்த காரை முழுவதும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த ப்ளோய்டு ரே ரோஸ்பெரி (49) என்பது தெரியவந்தது. 

நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து ப்ளோய்டு ரே ரோஸ்பெரியிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இதுவரை 41.3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை கடலில் குதித்து மீட்ட நபர்...!
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை படகில் சென்ற நபர் கடலில் குதித்து பத்திரமாக மீட்டுள்ளார்.
3. அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொரோனாவுக்கு பலி
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி கொலின் பவுல் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தார்.
4. அமெரிக்காவில் இதுவரை 40.8 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அமெரிக்காவில் இதுவரை 40.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
அமெரிக்காவில் இதுவரை 89 லட்சம் பேர் 3-வது டோஸ் ‘பூஸ்டர்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.