தேசிய செய்திகள்

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு + "||" + Meeting chaired by Sonia Gandhi Opposition Leaders Participation

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலையேற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆயத்தமாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிபிஎஸ்இ கேள்வி - மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனியா காந்தி
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
2. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் ‘முழுநேர தலைவர் நான்தான்’ - சோனியா காந்தி அதிரடி பேச்சு
ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டாம் என்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, ‘காங்கிரஸ் முழுநேர தலைவர் நான்தான்’ என பேசினார்.
4. முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்க தயார்... ஆனால்...! - சோனியாகாந்தி பேச்சு
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.
5. தேசிய அரசியல்: சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்த சித்தராமையா
தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று சோனியா காந்தி விடுத்த அழைப்பை சித்தராமையா நிராகரித்துள்ளார்.