தேசிய செய்திகள்

2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு + "||" + Must Plan Systematically For 2024 Polls": Sonia Gandhi At 19-Party Meet

2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

2024-நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு
சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது.
புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடைபெற்றது. 

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய  சோனியா காந்தி, 2024- ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என்றார். மேலும், தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சிபிஎஸ்இ கேள்வி - மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனியா காந்தி
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
2. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் ‘முழுநேர தலைவர் நான்தான்’ - சோனியா காந்தி அதிரடி பேச்சு
ஊடகங்கள் மூலம் என்னிடம் பேச வேண்டாம் என்று கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் அதிருப்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவித்த சோனியா காந்தி, ‘காங்கிரஸ் முழுநேர தலைவர் நான்தான்’ என பேசினார்.
4. முழு நேர காங்கிரஸ் தலைவராக இருக்க தயார்... ஆனால்...! - சோனியாகாந்தி பேச்சு
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக இருப்பதற்கு அடையாளம் தான் பல ஆண்டுகளாக சேமித்த இந்திய சொத்துக்களை விற்கும் மத்திய அரசின் முடிவு என சோனியாகாந்தி கூறினார்.
5. தேசிய அரசியல்: சோனியா காந்தியின் அழைப்பை நிராகரித்த சித்தராமையா
தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்று சோனியா காந்தி விடுத்த அழைப்பை சித்தராமையா நிராகரித்துள்ளார்.