உலக செய்திகள்

ஆஸ்திரேலியா: ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் + "||" + Australia: Scores arrested at anti-coronavirus lockdown protests

ஆஸ்திரேலியா: ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம்

ஆஸ்திரேலியா: ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம்
ஆஸ்திரேலியாவில் கொரோனா ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்னி,

ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களான சிட்னி, தலைநகர் கான்பெர்ரா, மெல்போர்ன் போன்ற நகரங்களில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால், அந்த நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

சிட்னியில் 2 மாதங்களும், கான்பெர்ரா மற்றும் மெல்போர்ன் ஆகிய நகரங்களில் 1 மாதமும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு அமல்படுத்துவதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. பல்வேறு நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது ஒரு சில நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 7 போலீசார் காயமடைந்தனர். நாடு முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மொத்தம் 250 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பலருக்கு கொரோனா விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு
புதுச்சேரியில் சுற்றுலா தளங்களில் 50 சதவிகித நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. ஊரடங்கு தளர்வுகள் அமல் - லடாக்கில் குவியும் சுற்றுலா பயணிகள்
லடாக்கில் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
3. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தளர்வுகள் - முழு விவரம்
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
5. ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்
பூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.