உலக செய்திகள்

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி + "||" + Hurricane Grace kills eight as it rips through eastern Mexico

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டை நேற்று ‘கிரேஸ்’ சூறாவளி புயல் தாக்கியது. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

குறிப்பாக, அந்நாட்டின் வெராகூரூஸ் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டது. சூறாவளியால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து - 19 பேர் பலி
மெக்சிகோவில் சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
2. பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம்
போதைப்பொருள் விற்பனை விவாரத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
3. மெக்சிகோ: சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
4. கடற்கரையில் போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
மெக்சிகோவில் உள்ள பிரபல கடற்கரை அருகே போதைப்பொருள் கும்பல் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
5. போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் என்ஜினீயர் குறித்த தகவல்கள்
மெக்சிகோவில் போதைப்பொருள் கும்பல்கள் இடையிலான துப்பாக்கி சண்டையில் பலியான இந்திய பெண் குறித்து உருக்கமான தகவல்கள் வெயியாகி உள்ளன.