உலக செய்திகள்

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி + "||" + Hurricane Grace kills eight as it rips through eastern Mexico

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி

மெக்சிகோ: சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளி புயலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டை நேற்று ‘கிரேஸ்’ சூறாவளி புயல் தாக்கியது. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.

குறிப்பாக, அந்நாட்டின் வெராகூரூஸ் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டது. சூறாவளியால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
மெக்சிகோ வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் நடத்திய சந்திப்பில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
2. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
3. மெக்சிகோ: மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம் - நோயாளிகள் 16 பேர் பலி
மெக்சிகோவில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தால் ஏற்பட்ட மின் தடை மற்றும் ஆக்சிஜன் தடையால் நோயாளிகள் 16 பேர் உயிரிழந்தனர்.
4. மெக்சிகோவில் கஞ்சாவை பயிரிடுவதும், பயன்படுத்துவதும் இனி குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட்டு
மெக்சிகோவில் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சாவை பயன்படுத்துவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது. அதேசமயம் ஒரு நபர் 5 கிராமுக்கு அதிகமாக கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி கிடையாது.
5. மெக்சிகோவில் தொடரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்; கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி
மெக்சிகோவில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் பேரணி நடத்தினர்.