உலக செய்திகள்

மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல் + "||" + INS Shakti reached Sri Lanka with Medical Oxygen

மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல்

மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது இந்தியாவின் ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சக்தி’ கப்பல் மருத்துவ ஆக்சிஜனுடன் இலங்கை சென்றடைந்தது.
கொழும்பு,

இலங்கையில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்கு மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்தது. ஆக்சிஜனை இறக்குமதி செய்வதற்காக கடந்த 17 ஆம் தேதி திரிகோனமலை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படையைச் சேர்ந்த ‘எஸ்.எல்.என்.எஸ். சக்தி’ கப்பல் கிளம்பியது.

இந்த சூழலில் இலங்கை கடற்படை சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, ஆக்சிஜனை அனுப்பி வைக்கும் பணியில் உதவும் விதமாக, இந்திய கடற்படை சார்பில் ‘ஐ.என்.எஸ் சக்தி’ என்ற கப்பல் மூலம் 100 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய இந்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. அதே சமயம் இலங்கையின் ‘எஸ்.எல்.என்.எஸ். சக்தி’ கப்பல் மருத்துவ ஆக்சிஜனுடன் நாளை இலங்கை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. டி20 உலகக்கோப்பை: நமீபியாவை எளிதில் வீழ்த்திய இலங்கை
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நமீபியாவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
3. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவிடம் ரூ.3,750 கோடி கடன் கேட்கும் இலங்கை
கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவிடம், இலங்கை ரூ.3,750 கோடி கடன் கேட்டுள்ளது.
4. எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
5. தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு: உலக வங்கி பாராட்டு
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் வினியோகத்தில் சர்வதேச அளவில் பங்காற்றிய இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.