தேசிய செய்திகள்

உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு + "||" + Would Have Slapped Uddhav Thackeray': Minister Narayan Rane Angers Sena

உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு

உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் - மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு
உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என மத்திய மந்திரி நாராயன் ரானா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
மும்பை,

மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் பாஜக சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்திரை என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி நாராயன் ரானா பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நாராயன் ரானா, மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரதின நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு எப்போழுது என தெரியாமல் தனது உரையை நிறுத்தி அருகில் இருந்த உதவியாளர்களிடம் கேட்டுள்ளார். 

முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரதினம் பெற்ற ஆண்டு எப்போழுது என்பது தெரியாதது மிகவும் அவமானகரமானது. நான் அப்போது அங்கிருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்’ என்றார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி நாராயன் ரானா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகம் - உத்தவ் தாக்கரே ஆலோசனை
மும்பையில் ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை அமைக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர்.
2. கோவில்கள் திறப்புக்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - உத்தவ் தாக்கரே
கோவில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
3. நூற்றாண்டு கண்ட நாயர் ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.100 கோடி: உத்தவ் தாக்கரே
மும்பை தோபிவாலா மருத்துவ கல்லூரி மற்றும் நாயர் ஆஸ்பத்திரி மேம்பாட்டுக்கு ரூ.100 வழங்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
4. உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி கைது
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய மந்திரி நாராயண் ரானா கைது செய்யப்பட்டுள்ளார்.
5. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கருத்து: பாஜக அலுவலகம் மீது கற்கள் வீசி சிவசேனா தாக்குதல்
உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என மத்திய மந்திரி நாராயன் ரானா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.