உலக செய்திகள்

நைஜீரியா: ராணுவ பயிற்சி பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 அதிகாரிகள் பலி + "||" + Officers killed in attack on Nigeria’s elite military academy

நைஜீரியா: ராணுவ பயிற்சி பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 அதிகாரிகள் பலி

நைஜீரியா: ராணுவ பயிற்சி பள்ளியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 அதிகாரிகள் பலி
நைஜீரியாவில் ராணுவ பயிற்சி பள்ள்ளியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்நாட்டின் கடுனா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளிக்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ பயிற்சி பள்ளியை சேர்ந்த 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும், சில அதிகாரிகள் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் ஒரு அதிகாரியை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியது எந்த பயங்கரவாத குழு என்பது குறித்தும், கடத்தப்பட்ட அதிகாரியை மீட்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியா: மதவழிபாட்டு தளத்தில் துப்பாக்கிச்சூடு - 18 பேர் பலி
நைஜீரியாவில் மதவழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர்.
2. நைஜீரியா: சிறைச்சாலையில் துப்பாக்கியேந்திய கும்பல் தாக்குதல் - 800 கைதிகள் தப்பியோட்டம்
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த துப்பாக்கியேந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.
3. நைஜீரியா: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
4. நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி
நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியா: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி
நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.