தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்கள் ரத்து + "||" + Indian Railways cancel 40 trains due to farmers' protest in Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்கள் ரத்து

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்கள் ரத்து
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் காரணமாக 40 ரயில்களை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளது.
லக்னோ, 

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் காரணமாக இந்திய ரயில்வே 40 ரயில்களை ரத்து செய்துள்ளது. 

இதுதொடர்பாக மொராதாபாத் ரயில்வே பிரிவின் மூத்த கோட்ட வணிக மேலாளர் (டிசிஎம்), சுதிர் சிங் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளங்களில் அமர்ந்ததால் உடனடியாக கிளம்பத் தயாராக இருந்த 21 ரயில்கள் நிறுத்தப்பட்டதுடன், 40 ரயில்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது . பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணத் தொகை திருப்பி அனுப்பப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக மாநிலத்தில் மூன்று புதிய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (பதவி உயர்வு மற்றும் வசதி) சட்டம், 2020 , விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பான விலை உறுதி , ஒப்பந்தம் தொடர்பான சட்டம் 2020 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகிய திட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தவர்கள் மொராதாபாத் பகுதியில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போரட்டத்தை தொடர்ந்தனர். இதை எதிர்பார்க்காத ரயில்வே நிர்வாகம் போராட்டக்காரர்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் அந்த பாதையில் செல்லும் 40 ரயில்களை ரத்து செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் ஜிகா வைரசை கட்டுப்படுத்த மத்திய குழு விரைந்தது
உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2. ரூ.3 கோடி வருமான வரி செலுத்த கோரி ரிக்‎ஷா தொழிலாளிக்கு நோட்டீஸ்
அக்டோபர் 19ஆம் தேதி அவருக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்து உள்ளது. அதில் அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறி உள்ளனர்.
3. ‘நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்’ இன்று தொடக்கம் !
‘பிரதான் மந்திரி ஆத்மநிர்பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா’ திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
4. உத்தரபிரதேசம்: மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது
உத்தரபிரதேசத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. லகிம்பூர் கேரி வன்முறை: மேலும் 4 பேர் கைது
லகிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.