உலக செய்திகள்

அமெரிக்காவில் சராசரி வருமானத்தில் அமெரிக்கர்களை விஞ்சும் இந்தியர்கள் + "||" + Indians surpass Americans in average income in the United States

அமெரிக்காவில் சராசரி வருமானத்தில் அமெரிக்கர்களை விஞ்சும் இந்தியர்கள்

அமெரிக்காவில் சராசரி வருமானத்தில் அமெரிக்கர்களை விஞ்சும் இந்தியர்கள்
அமெரிக்காவில் சராசரி குடும்ப வருவாய் மற்றும் கல்லூரிப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த அமெரிக்கா்களை இந்திய வம்சாவளியினா் விஞ்சியுள்ளனா்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் தற்போது சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 16 லட்சம் பேர் விசாக்களைப் பெற்றுள்ளனர். 14 லட்சம் பேர் இயற்கையான குடியிருப்பாளர்கள். 10 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆவார்கள். அமெரிக்காவில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மூலம் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி அமெரிக்க வாழ் இந்திய நடுத்தர குடும்பங்கள் ஆண்டுக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.93 லட்சம்) சம்பாதிக்கின்றனர். இது அமெரிக்காவின் தேசிய சராசரி வருமானத்தை விட இரு மடங்கு என்பது முக்கிய அம்சம். ஆக, அமெரிக்கர்களை விட இந்தியர்களின் வருமானம் அதிகம் ஆகும்.

இன்னொரு சிறப்பு, அமெரிக்க வாழ் இந்தியர்களில் 79 சதவீதத்தினர் கல்லூரி பட்டதாரிகள். இதில் அமெரிக்க தேசிய சராசரி 34 சதவீதம்தான். ஆக இதிலும் 2 மடங்குக்கு மேலாக இந்தியர்கள் உள்ளனர். ஆசிய நாடுகளிலேயே இந்தியர்களின் வருமானம்தான் அதிகம். அமெரிக்க வாழ் இந்திய நடுத்தர குடும்பங்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 டாலர் சம்பாதிக்கிற வேளையில் தைவான் நாட்டினர் 97 ஆயிரத்து 129 டாலரும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 95 ஆயிரம் டாலரும் சம்பாதிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி கண்டார்.
3. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குவிப்பது அதிகரிப்பா? - மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் குவிப்பது அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
4. சீனா செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டும் - இந்திய அரசு வலியுறுத்தல்
சீனாவிற்கு செல்வதற்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு விசா வழங்குமாறு, சீன அரசை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.