உலக செய்திகள்

நைஜீரியா: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதலை + "||" + Nigerian gunmen free dozens of kidnapped seminary pupils, says teacher

நைஜீரியா: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதலை

நைஜீரியா: துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதலை
நைஜீரியாவில் கடந்த மே மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல் கும்பல் விடுதலை செய்துள்ளது.
அபுஜா: 

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள தெகினா என்ற நகரில் இஸ்லாமிய பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் கடந்த மே 30ம் தேதி துப்பாக்கியுடன் வந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் பள்ளியில் பயின்ற 136 மாணவர்களை துப்பாக்கிமுனையில் கடத்திச்சென்றனர்.

கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க நைஜீரிய பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சி செய்தனர். இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்த 6 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். மேலும், 15 மாணவர்கள் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிவந்துவிட்டனர். 

இந்நிலையில், 3 மாதங்களுக்கு மேலாக தங்கள் பிடியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தல்காரர்கள் நேற்று விடுதலை செய்துள்ளனர். எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற முழு விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை. 

ஆனால், கடத்தல்காரர்களின் பிடியில் தற்போது எந்த மாணவர்களும் இல்லை என இஸ்லாமிய பள்ளி தலைவர் அபுபக்கர் அல்ஹசன் தெரிவித்துள்ளார். இதனால், மொத்த மாணவர்களும் (115 பேர்) விடுதலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களை விடுதலை செய்ய கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.  

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியா: சிறைச்சாலையில் துப்பாக்கியேந்திய கும்பல் தாக்குதல் - 800 கைதிகள் தப்பியோட்டம்
நைஜீரியாவில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த துப்பாக்கியேந்திய கும்பல் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர்.
2. நைஜீரியா: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
நைஜீரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
3. நைஜீரியாவில் மர்ம மனிதர்கள் துப்பாக்கி சூடு: 43 பேர் பலி
நைஜீரியாவில் உள்ள சகோடா மாகாணத்தில் இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் உயிரிழந்தனர்.
4. நைஜீரியா: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி
நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகளின் எல்லையில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
5. நைஜீரியா: இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் பலி
நைஜீரியாவில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 37 பேர் உயிரிழந்தனர்.