மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு + "||" + Thiruvallikkeni police file case against 63 MLAs including OPS

ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு

ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு
ஓ.பி.எஸ் உட்பட 63 எம்.எல்.ஏக்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா - வாலஜா சாலையில் அமர்ந்த பேரவை உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  பின்னர் சிறிது நேரத்தில் கைதான அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  

இந்த நிலையில், ஓபிஎஸ் உள்பட 63 எம்.எல்.ஏக்கள் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. விமானக் கட்டணத்துக்கு இணையாக தனியார் பேருந்துக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது - ஓபிஎஸ்
பண்டிகை விடுமுறையை முன்னிட்டுத் தமிழகத்தில் விமானக் கட்டணத்துக்கு இணையாக தனியார் பேருந்துக் கட்டணம் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் குற்றம்ச் சாட்டியுள்ளார்.
2. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
3. ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும்; ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் உத்தரவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
4. ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம்
தனது மனைவி மறைவையொட்டி ஆறுதல் கூறிய அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.
5. பேருந்துகளில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றச்சாட்டு
மகளிருக்கான இலவசப் பயணத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.