தேசிய செய்திகள்

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு + "||" + Rs 6000 relief for families affected by Bihar floods

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு

பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாட்னா,

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வெள்ளத்தால் இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்புப்பணிகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.

பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து முதல்-மந்திரி நிதீஷ் குமார் படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!
பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
2. உத்தரகாண்டில் மழை ஓய்ந்ததால் மீட்பு பணிகள் தீவிரம்
நைனிடால் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை பேரிடர் மீட்புப்படையினர் வழங்கி வருகின்றனர்.
3. 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் ரூ.905 கோடி கையிருப்பு? - அதிகாரிகள் விளக்கம்
பீகாரில் 6-ம் வகுப்பு மாணவன் வங்கி கணக்கில் 905 கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதாக வெளியான தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
4. பீகாரில் கனமழை வெள்ளம்; 43 பேர் பலி
பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. பீகாரில் 11 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் 11 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.