தேசிய செய்திகள்

7 ஆண்டுகளில் கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி + "||" + In the last 7 years, we have seen a new economic paradigm. Demonetisation on one side, and monetisation on the other side: Congress leader Rahul Gandhi

7 ஆண்டுகளில் கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

7 ஆண்டுகளில் கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன் கிடைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டில் பெட்ரோல், டீசல் , கேஸ் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த ரூ. 23 லட்சம் கோடி எங்கே சென்றது ஒரு பக்கம் பண மதிப்பிழப்பையும் மற்றொரு பக்கம் பணமாக்குதல் திட்டத்தையும் அறிவிக்கிறார்கள்.  

விவசாயிகள், தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், உள்ளிட்டோர் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 2014-க்குப் பிறகு பெட்ரோல் 42 சதவீதம், டீசல் 55 சதவீதம் உயர்ந்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன்? மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் பிரதமர் மோடியின் நண்பர்கள் நான்கைந்து நண்பர்களுக்கே பலன்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவிற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: அமித்ஷா உறுதி
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
2. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.
4. கொரோனா தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் எழுச்சி பெறாமல் இருக்க வழிகாட்டும் நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்துவதுடன், தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் கூட்ட வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
5. முல்லைப்பெரியாறு அணை வழக்கில் அறிக்கை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம்
முல்லைப்பெரியாறு அணை வழக்கில் உத்தரவிட்டபடி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அவகாசம் அளித்துள்ளது.