தேசிய செய்திகள்

கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணம் + "||" + President Ramnath Govind pays 3 day visit to Goa

கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணம்

கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணம்
கோவாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 5-ந்தேதி முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பனாஜி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதை முடித்து விட்டு டெல்லி திரும்பிய அவர் இந்தியாவின் கடலோர மாநிலங்களில் ஒன்றான கோவாவுக்கு செல்கிறார். அதன்படி வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையிலான 3 நாட்கள் அவர் கோவாவில் சுற்றுப்பணம் மேற்கொள்கிறார். 

இந்த பயணத்தில் முக்கியமாக அவர், தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்தில் நடக்கும் சிறப்பு நிகழச்சியில் பங்கேற்கிறார். குறிப்பாக இந்த கடற்படை தளத்தின் வைரவிழா கொண்டாட்டத்துடன் இணைந்து 6-ந்தேதி நடைபெறும் சிறப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இந்த தகவல்களை மாநில தகவல் தொடர்புத்துறை வெளியிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவா மாநிலத்தை சேர்ந்த ‘தற்சார்பு இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல்
கோவா மாநிலத்தை சேர்ந்த தற்சார்பு இந்தியா திட்ட பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.
2. மம்தா பானர்ஜியின் வடிவத்தில் நாடு மாற்றத்தை எதிர்பார்க்கிறது - கோவா எம்.எல்.ஏ
கோவா எம்.எல்.ஏ பிரசாத் கோன்கர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர் மம்தா பானர்ஜியையும் பாராட்டி பேசியுள்ளார்.
3. கோவாவில் வீடு வாங்கிய ராஷ்மிகா
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெற்றி பெற்ற கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார்.
4. ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு நேரடி ரயில்; இந்திய ரயில்வே அறிமுகம்
ஜார்க்கண்டிலிருந்து கோவாவுக்கு வாரம் ஒருமுறை செல்லும் ஜசிதிக்-வாஸ்கோ டா காமா எக்ஸ்பிரஸ் நேரடி ரயிலை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
5. கோவா மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாற்ற காங்கிரஸ் கோரிக்கை
கோவா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி குணாலை மாற்றுமாறு கோவா காங்கிரஸ் கோரிக்கை.