மாநில செய்திகள்

எந்த அரசு தடுத்தாலும் ‘விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’ பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு + "||" + BJP state leader Annamalai speaks on 'Ganesha statue procession will continue' even if any government stops it

எந்த அரசு தடுத்தாலும் ‘விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’ பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு

எந்த அரசு தடுத்தாலும் ‘விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’ பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
‘‘எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும்’’ என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
தென்காசி,

தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி ஊழியர் கூட்டம் பாவூர்சத்திரத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

சட்டமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதா உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தனர். தற்போது 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சி சார்பில் அனைத்து பொறுப்புகளுக்கும் போட்டியிட உள்ளனர். இதற்கு நாம் இன்றிலிருந்து 3 மடங்கு உழைக்க வேண்டும்.


விநாயகர் சிலை ஊர்வலம்

10 வருடமாக எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. எதுவும் செய்யாமல், மற்ற கட்சிகளை குறைகூறி தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது தற்போது தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. எனவே, எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

பூலித்தேவன் சிலைக்கு மாலை

விடுதலை போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து
மாபெரும் மக்கள் சக்தி கொண்ட: அ.தி.மு.க. பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து.
2. தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
3. தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி : பா.ஜ.க வரவேற்பு
தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அளித்த அனுமதிக்கு பா.ஜ.க வரவேற்பு தெரிவித்து உள்ளது.
4. மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்
மகாளய அமாவாசை: திதி, தர்ப்பணம் செய்யும் உரிமையை மறுப்பதா? அண்ணாமலை கண்டனம்.
5. மக்களை பற்றி சிந்திக்காத ‘தி.மு.க. அரசுக்கு உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்டுங்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
மக்களை பற்றி சிந்திக்காத தி.மு.க. அரசுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று விழுப்புரம் பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.