மாநில செய்திகள்

அதிமுக்கிய தேசிய சொத்துகளை விற்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டு + "||" + Former Union Minister of Congress accused of federal government attempt to sell vital national assets

அதிமுக்கிய தேசிய சொத்துகளை விற்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டு

அதிமுக்கிய தேசிய சொத்துகளை விற்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டு
‘‘தேசிய பணமாக்கல் திட்டத்தின்கீழ் நாட்டின் அதிமுக்கிய சொத்துகளை விற்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது’’, என காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி அஸ்வனி குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வனி குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய சொத்துகள், நரேந்திரமோடி அரசின் தேசிய பணமாக்கல் வழி கொள்கை மூலம் தனியாருக்கு விற்கப்பட உள்ளன. 2022 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான 4 வருடத்தில், பொருளாதாரத்தின் முக்கிய துறைகளை உள்ளடக்கிய தேசத்தின் அதிமுக்கிய சொத்துகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


பொது நலன் மற்றும் அரசாங்கத்தின் நம்பகக் கடமைகளை மீறி, தங்களுக்கு நெருக்கமான சிலருக்கு பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயல்கிறது.

தேசிய நலன்களுக்கு எதிரானது

இந்த கொள்கை பல்வேறு நிலைகளிலும் நெருங்கிய முதலாளித்துவம் மட்டுமே பொருளாதார பலன் அடைவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. தேசத்தின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்வது தேசிய நலன்களுக்கு எதிரானது.

வரி செலுத்துவோரால் நிதியளிக்கப்பட்ட சொத்துகளை, ஒரு சில வணிகக் குழுக்களுக்கு மாற்றுவதே இந்த கொள்கையின் நோக்கமாகும். இதன்மூலம் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில், பொருளாதார சக்தியின் கவனத்தை அதிகரிக்க வழிவகுக்கும். 30 முதல் 50 ஆண்டுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். பொது நிறுவனங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பாக மாறும்.

ஆலோசனை செய்யவில்லை

தேசிய பணமாக்கல் வழி கொள்கையை அறிவிப்பதற்கு முன்பு, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்படாதது பெரிய தவறு ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழக காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கலால் வரி 459% உயர்வு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் மீது கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டு உள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
2. தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
3. 4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் - மத்திய மந்திரி தகவல்
4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல் நிறுவனம். மத்திய மந்திரி டுவிட்டரில் பதிவு.
4. இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது; பா.ஜ.க. குற்றச்சாட்டு
இந்துகளின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
5. என்னை கொல்ல சதி: பா.ஜ.க. தேசிய துணை தலைவர் குற்றச்சாட்டு; பரபரப்பு வீடியோ
என்னை கொல்ல திரிணாமுல் காங்கிரசின் குண்டர்கள் சதி செய்துள்ளனர் என பா.ஜ.க. தேசிய துணை தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.