உலக செய்திகள்

சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலீபான்கள் அறிவிப்பு + "||" + Taliban Says "China Our Most Important Partner, Ready To Invest": Report

சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலீபான்கள் அறிவிப்பு

சீனா எங்களின் முக்கிய கூட்டாளி- தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது:-

சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு ஜபிபஹுல்லா முஜாஹித் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம்: ஜி ஜின்பிங்
தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்போம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
4. எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது - ராணுவ தளபதி
எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
5. பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடை: போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு
பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.