மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் + "||" + All party meeting on rural local elections tomorrow

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை, 

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனிடையே  சமீபத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் திங்களன்று ( 06-09-2021) மதியம் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல்: 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றியது தி.மு.க
மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, திமுக அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது.
2. உள்ளாட்சி தேர்தலில் 90 வயது பெருமாத்தாள் வெற்றி - எதிர்த்தவர்களுக்கு டெபாசிட் காலி
நெல்லை மாவட்டத்தில் தொண்ணூறு வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
3. உள்ளாட்சி தேர்தல் தி.மு.க வரலாற்று வெற்றி; 9 மாவட்ட முன்னிலை விவரங்கள்
வேலூரில் மொத்தமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
4. 5 ஆண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை 5 மாதத்தில் பெற்றுள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளது என அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.