உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா. திட்டம் + "||" + UN plans to aid affected people in Afghanistan

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா. திட்டம்

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா. திட்டம்
ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்ட ஐ.நா. திட்டமிட்டு வருகிறது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். 

இதற்கிடையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின. இறுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறின.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாகவும், கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியதை அடுத்து நிலைமை இன்னும் மோசமாகி விட்டது என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதையடுத்து ஐ.நா. தலைவர் அன்டோனியோ கட்டரெஸ் உலக நாடுகளிடையே ஆப்கானிஸ்தானுக்கு நிதி திரட்ட ஓர் முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளார். டென்மார்க், கஜகஸ்தான், வடக்கு மாசிடோனியா, பாகிஸ்தான், போலாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உள்ளிட்ட நாட்டு பிரதிநிதிகளுடன் அவர் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. விரைவில் உதவத் திட்டமிட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டதால் தலைநகர் காபூலில் இருந்த ஐநா., தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் டெல்லி திரும்பினார்
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் பன்ஸ்ரீலால் அரிண்டா விடுவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.
2. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை: தலீபான்கள்
பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது என செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறினார்.
3. ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை சுட்டுக்கொன்ற தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொதுமக்கள் 20 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் நடவடிக்கையை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருகின்றன - ஹர்ஷ் வர்தன் சிரிங்லா
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் கண்காணித்து வருவதாக ஹர்ஷ் வர்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் சம உரிமை கோரி பெண்கள் போராட்டம்
காபூலில் அதிபர் மாளிகை அருகே பெண்கள் சிலர் சம உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.