தேசிய செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பு + "||" + India sends 150 tons of medical oxygen to Sri Lanka

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பு
இலங்கைக்கு சுமார் 150 டன் மருத்துவ ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
புதுடெல்லி,

இலங்கையில் கொரோனாவின் 3-வது அலை பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இதை ஏற்று இலங்கைக்கு மத்திய அரசு உதவி வருகிறது. அந்தவகையில் கடந்த 22-ந் தேதி 100 டன் மருத்துவ ஆக்சிஜனை கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது.

இதன் தொடர்ச்சியாக மேலும் சுமார் 150 டன் ஆக்சிஜனை தற்போது மத்திய அரசு அனுப்பியுள்ளது. விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஆக்சிஜன், இலங்கையை அடைந்துவிட்டதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.
3. இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்
இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
4. நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.
5. இலங்கை தமிழர்களுக்கு இனிக்கும் செய்திகள்!
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று நீண்ட நெடுங்காலமாக புகழாரம் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.