மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை + "||" + Rural local elections: Chief-Minister MK Stalin's consultation today

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை, 

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செப்டம்பர்15-ந்தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தசூழலில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நாளை (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார். 

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் , ஒன்றிய செயலாளர்கள் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
3. விஜயதசமியன்று கோவில்கள் திறக்கப்படுமா? முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் தி.மு.க.!
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.
5. மாவட்ட பஞ்சாயத்து, யூனியன் வார்டுகள் அனைத்திலும் தி.மு.க. வெற்றி
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வார்டு உறுப்பினர் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.