உலக செய்திகள்

இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம் + "||" + No chance of famine in Sri Lanka says the Government

இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்

இலங்கையில் உணவுப்பஞ்சம் ஏற்படாது - இலங்கை அரசு திட்டவட்டம்
இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கொழும்பு,

அண்டை நாடான இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. 

இதனால் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் நாட்டில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. 

இதனையடுத்து உணவுப்பொருட்களின் பதுக்கலை தடுக்கவும், அத்தியாவசிப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்கவும் நாட்டில் பொருளாதார அவசர நிலையை அண்மையில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதன் மூலம், அரிசி, சர்க்கரை போன்ற முக்கிய உணவுப்பொருட்களின் விலையை நியாயமான விதத்தில் பராமரிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் இலங்கையில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்படும் என்று சமீபத்தில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சீனாவுடன் நிலவும் கடன் சுமையால் இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அந்நாட்டின் நிதித்துறை இணையமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மறுத்துள்ளார். கொழும்புவில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும், சர்வதேச ஊடகங்களின் கருத்தை இலங்கை அரசு நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பண்ணாட்டு நிதியத்திடம் நிதியுதவி கேட்கப் போவது இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. எரிபொருள் கொள்முதல்: இந்தியாவிடம் கடன் உதவி கோரும் இலங்கை..!
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் இலங்கை கடுமையான அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
2. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 18.1 ஓவர்களில் 103 ரன்னில் சுருண்டது.
3. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பி வைப்பு
இலங்கைக்கு சுமார் 150 டன் மருத்துவ ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
4. நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்றனர்.
5. இலங்கை தமிழர்களுக்கு இனிக்கும் செய்திகள்!
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்று நீண்ட நெடுங்காலமாக புகழாரம் சூட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.