உலக செய்திகள்

இந்தோனேசியா சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 பேர் பலி! + "||" + Fire breaks out at jail in Indonesia, kills 41 drug inmates

இந்தோனேசியா சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 பேர் பலி!

இந்தோனேசியா சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: 41 பேர் பலி!
இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.
ஜகார்த்தா, 

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 

சிறைச்சாலையில் நேரிட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்குறிச்சி: பட்டாசு கடையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சியில் உள்ள பட்டாசு கடையில் இன்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
2. சமையல் கேஸ் கசிந்து தீ விபத்து - 2 குழந்தைகள் பலி !
டெல்லியில் சமையல் கேஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி ஆகினர்.
3. டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
4. ஆந்திரா: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள ஜமீன் கொரட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரஜினி. இவருக்கு வசந்தி (வயது 32) என்கிற மனைவியும், தர்ஷினி என்ற ஒரு மகளும், தீபக், தர்ஷன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.