தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 37,875 பேருக்கு தொற்று! + "||" + India logs 37,875 new Covid-19 cases; 21% higher than yesterday

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 37,875 பேருக்கு தொற்று!

இந்தியாவில் மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 37,875 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில், நேற்றைய பாதிப்பை விட இன்று 21 சதவீதம் அதிகரித்துள்ளது.   

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 ஆயிரத்து 875 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 25,772 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,96,718 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,411 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,114 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,64,051 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 70,75,43,018 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,47,625 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. 100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
3. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 36,339 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.