தேசிய செய்திகள்

இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு + "||" + India Russia security advisers meet in Delhi

இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு

இந்தியா-ரஷ்யா பாதுகாப்பு ஆலோசகர்கள் சந்திப்பு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் இன்று ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவ், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், இந்திய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று தலைநகர் டெல்லியில் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை நிகோலாய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அது குறித்து இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட அதிகாரிகள் நடத்தும் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. 100 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியாவுக்கு பில்கேட்ஸ் பாராட்டு- பிரதமர் மோடி நன்றி
இந்தியா 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று வரலாற்று சாதனை படைத்தது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரிப்பு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.
4. இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டம்; 152 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா
இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்துள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,623- பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.