தேசிய செய்திகள்

அசாம் படகு விபத்து: ஒருவர் பலி - 33 பேர் மாயம் + "||" + Two boats collided, one of them capsized kills one in Assam

அசாம் படகு விபத்து: ஒருவர் பலி - 33 பேர் மாயம்

அசாம் படகு விபத்து: ஒருவர் பலி - 33 பேர் மாயம்
அசாமில் இரு படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கவுகாத்தி,

அசாம் மாநிலம் ஜோர்கத் மாவட்டம் நிமதி காட் அருகே பிரம்மபுத்திரா நதியில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு படகு நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணித்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை 42 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த படகு விபத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், 33 பேர் மாயமாகியுள்ளனர். தண்ணீரில் மூழ்கிய 33 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. இந்து மதக்கடவுள் சிலையை அவமதித்த நபர் கைது
இந்து மதக்கடவுள் விநாயகர் சிலையை காலால் மிதிப்பது போன்று புகைப்படம் எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2. அசாம்: கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து இடைநீக்கம்...
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கைதாகியுள்ள அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
3. அசாம்: சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
4. அசாமில் நேற்று 196 பேருக்கு கொரோனா; 307 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,198 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. அசாமில் இன்று 375 பேருக்கு கொரோனா; 366 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 3,314 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.