மாநில செய்திகள்

காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு + "||" + Election to the post of MP for 2 vacant States: Election Commission of India Announcement

காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை, 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். எனினும் இருவரும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தினால் தங்களது மாநிலங்களவை பதவியை ராஜினமா செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வேட்பு மனு தாக்கல் செய்யவதற்கு செப். 22 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் அக்டோபர் 4 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக ஏற்கனவே காலியாக இருந்த 1 இடத்திற்கு தேர்தல் நடைபெற்று திமுக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 1,587 பேருக்கு கொரோனா தொற்று - 18 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் புதிதாக 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
3. தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்
தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவு: புதிதாக 1,556 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது