மாநில செய்திகள்

நேரலையில் சட்டசபை நிகழ்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + Live Assembly Event - MK Stalin's announcement

நேரலையில் சட்டசபை நிகழ்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நேரலையில் சட்டசபை நிகழ்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை நடைபெறும் போது நிகழ்வுகளை நேரலையில் தர நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

கலைவாணர் அரங்கில் சில காரணங்களால் பேரவை கூட்டத்தை நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை நடக்கும் போது நேரலை செய்யப்படும் என்றார்.

ஆளும் கட்சி எதாவது ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், எதிர் கட்சியினரை சபாநாயகர் வெளியே அனுப்புவதும் வழக்கமாவிவிட்ட இந்த சூழ்நிலையில் சட்டசபையை மக்களே நேரடியாகப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி நேரலை உடனே தேவை என்ற கருத்து நீண்ட நாட்களாவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.