மாநில செய்திகள்

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் + "||" + In the assembly, there was a heated debate on Jayalalithaa's death and the Kodanad affair

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்
கோடநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி இடையே சட்டசபையில்  காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டசபையில் , ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார்.  அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

அதுபோல் மதியம் கோநாடு விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

மறைந்த முதல்-அமைச்சர் கோடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கோடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல; கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என முதல்-அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை. புலன் விசாரணை வேண்டாம் என  கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என  எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. "இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்"- மு.க.ஸ்டாலின்
திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ, அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாகத்தான் இருந்துள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
2. தமிழ் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகமெங்கும் பயணம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொருநை ஆற்றங்கரை நாகரீகம் 3,200 ஆண்டுகள் பழமையானது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
4. வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை- அமைச்சர் செந்தில்பாலாஜி
வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் நிலக்கரியை காணவில்லை என சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
5. பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்
பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.