தேசிய செய்திகள்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு: 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் + "||" + Ford to stop manufacturing cars in India - sources

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு: 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்

இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு:  4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
இந்தியாவில் ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

அமெரிக்காவைச்சேர்ந்த முன்னணி வாகன நிறுவனமான போர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நான்கில் ஒரு பங்கு கார் உற்பத்தில் கூட நடைபெறாத நிலையில் நஷ்டம் காரணமாக ஆலைகளை மூட முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி,  ஸ்பெயின் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போர்டு நிறுவன ஆலைகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விற்பனையை மட்டும் இந்தியாவில் தொடர போர்டு நிறுவனம் திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சுமார் 2 பில்லியன் டாலர் அளவில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்சினை காரணமாக ஃபோர்டு நிறுவனம் முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி ஆலை மூடப்பட்டால் இந்தியாவில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.