மாநில செய்திகள்

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை + "||" + New depression in the Bay of Bengal - Indian Meteorological Center warning

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
13ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை

வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்தியவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று முதல் வருகிற 13ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

13ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். 

இன்று முதல் வருகின்ற 11ம் தேதி வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகள் , அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
3. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதாவது வரும் 24 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்துக்கு மழை தொடரும்
சென்னை எழும்பூர்,சென்ட்ரல் , புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.