தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வரவில்லை - மத்திய அரசு + "||" + The pace of vaccination and coverage is rapidly increasing Rajesh Bhushan, Union Health Secretary

இந்தியாவில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வரவில்லை - மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை முடிவுக்கு வரவில்லை - மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் உயர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் உள்ள 30 மாவட்டங்களில் நோய் பாதிப்பு விகிதம் 10%-க்கும் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,000 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மட்டும் 32,000 தொற்றுகள் பதிவாகி உள்ளன.

தடுப்பூசி செலுத்தும் பணி  வேகமாக அதிகரித்து வருகிறது.  ஒரு நாள் சராசரி டோஸ் மே மாதத்தில் 20 லட்சத்திலிருந்து செப்டம்பரில் 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 30 -ம் தேதியில் இருந்து செப்டம்பர் முதல் 7 -ம் தேதி வரை அதிக தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.

கடந்த 24 மணி நேரத்தில் 86 லட்சம் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.  பண்டிகைகளுக்கு முன் தடுப்பூசி போடும்  வேகத்தை அதிகரிக்க வேண்டும்.  இந்தியாவில் கொரோனா 2வது அலையின் உயர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.