உலக செய்திகள்

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப் 30-தேதி வரை நீட்டிப்பு + "||" + Japan extends COVID-19 emergency curbs in Tokyo, other areas

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப் 30-தேதி வரை நீட்டிப்பு

ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செப் 30-தேதி வரை நீட்டிப்பு
ஜப்பானில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், நடைமுறையிலிருக்கும் அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றம் 18 இதர பகுதிகளில் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடனம் செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தற்போது அமலில் இருக்கும் அவசரநிலையானது, வரும் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கொரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஜப்பான் பிரதமர் கூறுகையில், 

கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், மக்கள் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.