தேசிய செய்திகள்

பாராஒலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி! + "||" + Prime Minister Narendra Modi met the Indian contingent who participated in the 2020 Tokyo Paralympics

பாராஒலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி!

பாராஒலிம்பிக் வீரர்களுக்கு விருந்தளித்த பிரதமர் மோடி!
பாராஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது வீட்டில் விருந்து அளித்தார்.
புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கியது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர். இதனையடுத்து டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 5- தேதி கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார். 

பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா 24-வது இடம் பிடித்தது.

இந்நிலையில், பாராஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது வீட்டில் விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் பாராஒலிம்பிக் வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர். மேலும் பாராஒலிம்பிக் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பல்வேறு வீரர்கள் தாங்கள் பதக்கம் வென்ற விளையாட்டு உபகரணங்களில் தங்களது கையொப்பமிட்டு அதனை பரிசாக பிரதமர் மோடிக்கு அளித்தனர். அனைத்து வீரர்களும் கையொப்பமிட்ட அங்கியும் பிரதமருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் சட்டத்துறை மந்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.