தேசிய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி + "||" + Prime Minister Narendra Modi chairs the 13th BRICS Summit, via video conference

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி

பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது - பிரதமர் மோடி
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான 13வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த 13வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்குகிறது.

இந்த மாநாட்டில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பிரிக்ஸ் உச்சி மாநாட்டு கூட்டத்தை 2வது முறையாக தலைமை ஏற்று நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. பிரிக்ஸ் நாடுகள் கடந்த 15 வருடங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த பிரிக்ஸ் மாநாடு பயனுள்ளதாக உள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டின் தலைமையின் போது இந்தியா அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் முழு ஒத்துழைப்பைப் பெற்றுள்ளது. இதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய பாரா ஒலிம்பிக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து
இந்திய பாரா ஒலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார்.
2. வருகிற 14-ந்தேதி பிரதமர் மோடி உத்தரபிரதேசம் செல்கிறார்
பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேசம் செல்கிறார்.
3. பொது சேவையில் 20 ஆண்டுகள்; பிரதமர் மோடியை பராட்டி நிகழ்ச்சிகளை நடத்த பாஜக ஏற்பாடு
பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
4. மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி டுவிட்
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
5. ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு அவமானம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை புதுப்பித்ததன் மூலம், அவதித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.