மாவட்ட செய்திகள்

கேரளாவில் மேலும் 26,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 114 பேர் உயிரிழப்பு + "||" + Another 26,200 people in Kerala have been diagnosed with corona infection

கேரளாவில் மேலும் 26,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 114 பேர் உயிரிழப்பு

கேரளாவில் மேலும் 26,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 114 பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று 26,200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்று ஒரே நாளில் 26,200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 29,209 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 114 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். 

தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 40,50,665 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,126 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது கொரோனா சிகிச்சையில் 2,36,345 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை வரும் 30ஆம் தேதிக்கு முன் செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.