மாநில செய்திகள்

வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா + "||" + Corona 'Negative' certificate mandatory for Nilgiris returning to overseas - Collector Innocent Divya

வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.
ஊட்டி,

நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பும் நீலகிரி மக்களுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்து உள்ளார்.

நிபா வைரஸ் பரவும் விதம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவுகிறது. பழந்தின்னி வவ்வால்கள் மூலம் நோயை உண்டாக்கும் அந்த வைரஸ் பெருக்கம் அடைகிறது. இந்த நோய் மூளை காய்ச்சலுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். கடும் காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுயநினைவு இழத்தல், மனக்குழப்பம் மற்றும் மரணம் ஏற்படுத்தலாம். தொற்று ஏற்பட்ட 5 முதல் 15 நாட்களுக்குள் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

உடனே காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும். மேலும் ரத்த மாதிரிகளை பரிசோதித்து கண்டறியலாம். காய்கறி மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. 

நிபா வைரஸ் தாக்கியவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் தொற்று பதிவாகும் நபர்களோடு முதல் மற்றும் இரண்டாம் நிலை தொடர்பு இருப்பதன் மூலமாக பரவுகிறது.

எனவே தடுப்பு நடவடிக்கையாக அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வந்தாலும், நீலகிரியை சேர்ந்தவர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தாலும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, ‘நெகட்டிவ்’ சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.